Pages

Monday 19 December 2011

திருமணத்துறவு - 2

கடந்த பதிவில் தொடரும் என்று குறிப்பிடாமலேயே அடுத்து சில விஷயங்களைப் பற்றி எழுதுவேன் என்று கோடிட்டுக் காட்டியிருந்தேன்.
அதாவது - இது நாமே உருவாக்கிக் கொண்டது.
இதில் கடவுளை இழுப்பதற்கு வேலையில்லை.
[ஒருவேளை, எனக்கு திருச்சபை வரலாறு தெரியவில்லையோ என்னவோ.
இதைப் பற்றி வேண்டுமானால் பிறகு எழுதலாம்]

அதாவது - திருமணத்துறவு பற்றியும் அதில் உள்ள சிக்கல்கள் பற்றியும்.
பெடபிலயா பற்றி மட்டும் எழுதியதால் விபச்சாரம் சரியா என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள் – இப்படிக் கேட்டால் என்ன சொல்லமுடியும்?

சிறுவர்களைத் துன்புறுத்துவது தவறு என்கிறோம் – ஏனெனில் அது அவர்களின் விருப்பத்திற்கு எதிராக நடக்கிறது. அப்ப பெண்களோடு நடக்கலாமான்னா என்ன சொல்ல முடியும்? அது அவங்க விருப்பத்தைப் பொருத்தது. நம்ம என்ன செய்ய முடியம்?

"திருமணத்துறவிற்கு" எதிராக இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை வன்மையாகக் கண்டிப்பதுதான்நமது நோக்கமமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

எனவே இந்தப் பிரச்சனைகளோடு தொடர்புடைய திருமணத் துறவு பற்றியும் அலசுவது அவசியம்.

ஒரு குரு ஒரு பெண்ணோடு [-adult -] தொடர்பு கொண்டால் அது அவருடைய தனிப் பட்ட விருப்பம்.அல்லது நமது மொழியில் பாவம். அதை அவர் சரி பண்ணிக் கொள்ளலாம் அல்லது அதற்காக திருச்சபை கொடுக்கும் தண்டனைகளை அனுபவிக்கலாம். அதைத் தாண்டி இது சிவில் குற்றம் என்றால் அதற்கான தண்டனையையும் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். [எல்லாவற்றையும் அனுபவிக்கும் போது தண்டனையையும் அனுபவிக்கத்தானே வேண்டும்.]

அதாவது, இதையாவது நாம் ஒரு விதத்தில், நாம் மனித பலவீனம் என்கிற விதத்தில் புரிந்து கொள்ளலாம்.ஆனால் பெடபிலியா என்பது அப்படிப் பட்டதல்ல. அதற்காக நான் மற்றதைச் சரி என்று சொல்லவுமில்லை.
நாம் நமது கட்டுப் பாட்டிற்குள் இல்லாத போது எதன் கட்டுப் பாட்டில் இருக்கிறோமோ அந்தக் கட்டுப்பாட்டிலேயே போவதற்கான துணிவு வேண்டும் என்பதைத் தான் தெளிவு படுத்த விரும்புகிறேன். [இதன் வழியாய் எனக்குள்ள துணிவையும் அதிகரித்துக் கொள்கிறேன்.]

ஏன் நாம் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறோம்?

  • பாலியல் உறவுகளில் ஈடுபடுவது பாவம் என்ற சிந்தனை நமது பண்பாட்டில் ஊறிக் கிடக்கிறது. நம் மனதிற்குள் ஆயிரமாயிரம் அழுக்கு மூட்டைகளைச் சுமந்து கொண்டு வெளியே வெள்ளை உடையில் வான தூதர்களாகக் காட்டிக் கொள்கிறோம். ஏறக்குறைய எல்லாருமே அப்படித்தான். தனக்குள் இருக்கும் குப்பைகளைக் காட்டிக் கொள்ளாமல் நாகரிகமாகப் பழகப் பேசக் கற்றுக் கொண்டோம்.பாலியல் பற்றி வெளியில் பேசுவது தவறு என்றும் – அதில் நமக்குள் ஒருக் கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டோம். நான் எனது தனிப்பட்ட வாழ்வில் எப்படி இருந்தாலும் சரி - சிலவற்றை சரி என்று சொல்லக் கற்றுக் கொண்டோம். அது தவறென்றால் வேறென்ன செய்யலாம்.

பெடபிலியாவுக்கு எதிராக விவிலியம் ஒன்றும் சொல்லவில்லையா – அல்லது ஏதாவது சொல்கிறதா?
சரி அது அடுத்த விஷயம்.

  • திருமணத் துறவை மேற்கொள்கிறவர்கள் பாலியல் உறவு கொண்டால் அது மிகப் பெரிய தவறாக கருதப் படும் – நமது பெயர் போய்விடும் என்கிற சூழலில், வெளியில் தெரியாமல் இருக்க அதே சமயம் நமது இச்சைகளின் கட்டுப் பாட்டிற்குள் நம்மை நுழைத்து அதில் சற்று புல்லரித்துப் போகலாமென்றுதான் பெடபிலியா.

  • இது பண்பாடு தாண்டி, நாடுகள், கடல்கள் தாண்டி எல்லா பக்கமும் குருக்கள் தங்களது இச்சைகளை இவ்வாறுதான் போக்குவதாக பத்திரிக்கைகள் ஒரு தோற்றத்தை உண்டாக்குகின்றன. இதுதான் சமயம் என்று பாஸ்டர்கள் “இதற்குத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் - பாஸ்டர் களிடம் இந்தப் பிரச்சனை எல்லாம் இல்லை பாருங்கன்னு” பேட்டியெல்லாம் குடுக்குறாங்க. ஒருவேளை அவங்களுக்கு உள்ள பொறுப்பு - திருமணம் கொடுக்கிற குடும்பம் என்கிற உணர்வு - இதெல்லாம் காரணமாக இருக்கலாம். [அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பல இருக்கின்றன - ஆனால் அதுக்கு இது நேரம் இல்லை, அப்புறம் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் வேண்டாம்?]

*நமது கேள்வி என்னன்னா -
திருமணம் செய்து இந்தப் பணியை சிறப்பாக ஆற்றலாம் என்றால் அதில் என்ன சிக்கல்?  என்பதுதான்.
  • 4 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குருக்கள் திருப்பலிக்கு முதல் நாள் தன் மனைவியோடு உடலுறவு கொள்ளக் கூடாது என்றுதான் சட்ட நூல் சொன்னது. [சட்ட வல்லுனர்கள்தான் சரியா தப்பான்னு சொல்லணும்.]

  • அது மட்டுமல்ல - எத்தனை திருத்தந்தைகள் - பிற திருத்தந்தையின் மகன்கள் அல்லது ஆயர்களின் மகன்கள் என்பதையும் வரலாறு சொல்லும். திருத்தந்தையின் மகன்களே திருத்தந்தைகள் - கேட்பதற்கே நன்றாக இருக்கிறதே. திருச்சபை வரலாற்றியல் வல்லுனர்கள் நம்மைத் தெளிவு படுத்தலாம். இல்லாட்டி, Dan Brown கிட்ட சொல்லி research பண்ண சொல்லலாம். [திருச்சபை வரலாற்று நிபுணர்கள் தான் நமக்குத் தெளிவு படுத்தனும்.]

  • அதாவது கத்தோலிக்கத் திருச்சபையில் திருமணம் செய்து கொண்ட குருக்கள் இருக்கும்போது: அதைச் சரி என்று ஏற்றுக் கொள்ளும் போது - ஏன் லத்தீன் முறைப்படி திருப்பலி நிறைவேற்றும் குருக்கள் மட்டும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?
  • ஏறக்குறைய 20 சதவிகிதம் கத்தோலிக்கக் குருக்கள் திருமணம் செய்துகொண்டவர்கள் – அதாவது அவர்கள் அனைவரும் ஆர்த்தடாக்ஸ் முறையைப் பின்பற்றுபவர்கள் – ஆனாலும் கத்தோலிக்கர்கள் – அதேசமயத்தில் அமெரிக்காவிலும் ஏறக்குறைய நூறு குருக்கள் திருமணம் செய்தவர்களாக இருக்கின்றனர் – ஜூலை இருபத்தி இரண்டாம் தேதி 1980 –ம் ஆண்டு பிற சபைகளில் திருமணம் செய்து குருக்களாக உள்ளவர்கள் கத்தோலிக்கத் திருச்சபைக்கு வரும் போது தாங்கள் மனைவியை விவாகரத்துச் செய்ய வேண்டிய அவசியமில்லை – அப்படியே ஏற்றுக் கொள்கிறோம் என்று உரோமை சொன்னது. அவர்களெல்லாம் திருமணம் செய்து குருத்துவ பணியை ஆற்றுகிற போது ஏன் மற்றவர்களால் நிறைவேற்ற முடியாது. இத்தனைக்கும் முதல் போப்பே திருமணம் ஆனவர்தானே!

  • அதனால் இந்த திருமணத்துறவைப் பற்றி ஆயர்கள் சிந்திப்பது நல்லது. ஒருவேளை ஆயர்களுக்கு மட்டும் திருமணத்துறவை கட்டாயமாக்கலாம். தற்சமயம் ஜெர்மனியில் ஓர் ஆயர் இந்தக் கருத்தை முன் வைத்திருப்பதாக அறிகிறோம். அதாவது குழும வாழ்வு வாழ்கிற குருக்கள் தவிர மற்றவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

  • பாலியல் குற்றங்களுக்கான மாற்று என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அதனால் இது போன்ற குற்றங்கள் குறைந்துவிடாது என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் பாலியல் குற்றங்களுக்காக மாட்டுவதில் திருமணமானவர்களும் [திருமணமானவர்கள் தான்] நிறைய இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். அதனால் அதற்கான மாற்று இல்லை.

  • மாறாக நமக்கான பொறுப்பும்- பொறுப்புணர்வும் - நம் மீது இருக்கிற அறப்பொறுப்பையும் நாம் உணர ஒரு வாய்ப்பு இருக்கிறது. திருமணத்தினால்தான் அது வர வேண்டும் என்று இல்லை.

  • ஆனால் திருமணம் செய்திருக்கிற நமது பெற்றோர்களின் அறப் பொறுப்பை நாம் பார்த்தாலே போதும்.எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும், சிக்கல்களுக்கு மத்தியிலும் ஒருவருக்கொருவர் பொறுப்பு உள்ளவர்களாய் - இருந்திருக்கிறார்கள். நமது நண்பர்கள் - உறவினர்கள் --- இதைவிட வேறென்ன வேண்டும்?
  • இதிலிருந்தாவது நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

[ஆனால் இன்னொரு விஷயம். இனிவரும் குருக்களுக்குத்தான் திருமணம் என்பதில்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். தற்போதுள்ள குருக்கள் திருமண வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்கள் - என்பதற்கான காரணங்கள் பல இருக்கின்றன.]



No comments:

Post a Comment